IMPORTANT

மக்கள் பாதையின் செயல்பாடு மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிய எங்கள் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தை பார்க்கவும் ISupportUSagayamIAS <<==>> Please follow our Facebook page ISupportUSagayamIAS for the Events and Activity updates. | மக்கள் பாதையின் மாவட்ட அளவிலான வாட்சப் குழுவில் இணைய 7695 800 800 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தை வாட்சப் செய்யவும் <<==>> WhatsApp your Name and District to 7695 800 800 to join our district level WhatsApp groups.

திண்ணை

கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில் தமிழ் மொழியின் சிறப்பு, சமூகச் சிந்தனைகள், அடிப்படை ஆங்கிலக் கல்வி என்று அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுத்து அவர்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டமே திண்ணை.

திண்ணையின் அவசியம் குறித்து திரு. சகாயம் IAS அவர்கள்.

உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களை மொழித்திறன், செயற்திறன் மற்றும் பொது அறிவிலும் மெருகேற்றி போட்டித்தேர்வுகளையும், அரசுத் தேர்வுகளையும் தன்னம்பிக்கையுடன் அணுக வைக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திண்ணை வகுப்புகள் மக்கள் பாதை தன்னார்வலர்கள் மூலம் செயல்பட்டு வருகின்றது.

சுமார் 200 திண்ணை வகுப்புகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன.


விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 100 வகுப்புகளுக்கு மேல் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

உங்கள் ஊரிலோ, நகரிலோ திண்ணை வகுப்பு ஆரம்பிக்க விருப்பமா:


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க விருப்பமுள்ளவரா நீங்கள் ?
எங்களுடன் தன்னார்வலராக இணைந்து செயல்பட தொடர்பு கொள்ளவும்,
திரு. வில்லியப்பன் - 98407 76135

Photos